Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

அதர்வா, கண்ணன் காம்போவில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் படம்

மனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் தான் இயக்குனர் கண்ணன். அதர்வாவுடன் அவர் இணையும் அடுத்த படம் நல்ல அதிர்வலைகளோடு துவங்கிருக்கிறது. அதர்வா, கண்ணன் காம்போவில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் படம், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்திருக்கிறது. இயக்குனர் ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆரம்பத்திலேயே சக்சஸ் ரூட்டில் பயணிக்க துவங்கியிருகிறது.

இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வரும் , “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில், தனுஷ் ஜோடியாக நடிக்கும் மேகா ஆகாஷ் இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மேகா ஆகாஷ், கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜொலிக்கவிருக்கிறார்.

“அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடியை திரையில் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களும், இளைஞர்களும் புதுமையாக உணர்வார்கள். முன்னணி நடிகையாக வர அத்தனை தகுதிகளும் மேகா ஆகாஷுக்கு இருக்கிறது. மேகா ஆகாஷின் பிரபலத்தன்மை இளைஞர்களிடம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. அவரை எங்கள் படத்தில் நாயகியாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் இயக்குனர் கண்ணன்.

Back To Top
CLOSE
CLOSE