Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மிஷ்கின் மற்றும் விக்ராந்த் நடிக்கும் “சுட்டுப்பிடிக்க உத்தரவு”

ஒரு படத்தின் தலைப்பு ரசிகர்களை ஈர்க்கும் விதமாகவும் இருக்க வேண்டும், கதைக்கும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு தலைப்பிட பட்ட படம் தான் ” சுட்டுப்பிடிக்க உத்தரவு”. மிகுந்த பொருட்செலவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்த படத்தை இயக்குபவர் ராம் பிரகாஷ் ராயப்பா. “தமிழில் எண் ஒன்றை அழுத்தவும்” என்ற வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ சார்பில் திரு. P K ராம் மோகன் தயாரிக்கவுள்ளார். இயக்குனர் மிஷ்கின், மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான கதா பாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் பிரபல இயக்குனர் சுசீந்திரனும் நடிக்க உள்ளார் என்பது சிறப்பு செய்தி. கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது . இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது.

இப்படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில் , ” விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் பொழுதே ஒரு திகிலான ‘கிரைம்’ நடக்கின்றது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே இந்த கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உக்கார்ந்து விறுவிறுப்போடு பார்க்கவைக்கும் கதை இது ”.

Back To Top
CLOSE
CLOSE