Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய ‘சினிமா சிட்டி’..!

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நல்ல விலை கொடுத்து சினிமா சிட்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அரவிந்த்சாமி – த்ரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சதுரங்க வேட்டை-2’ படத்தையும் இந்த நிறுவனம் தான், தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். பி.ஜி.முத்தையா மற்றும் சூரஜ் நல்லுசாமி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

Back To Top
CLOSE
CLOSE