Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்ற பார்ட்டி டீசர்

எந்த ஒரு படத்துக்கும் ரசிகர்களை தயார்படுத்தும் முதல் ஆயுதம் டீசர் தான். ஒரு சிறந்த டீசரே ரசிகர்களிடம் படத்துக்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் பார்ட்டி. இரு நாட்களுக்கு முன்பு வெளியான பார்ட்டி படத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

டீசரில் இருக்கும் புதுமை, இளமை, எனர்ஜி ரசிகர்களை ஈர்க்கும் விஷயங்களால் சமூக வலைத்தளங்களில் பார்ட்டி டீசர் ட்ரெண்டிங்கில் உள்ளது. டீசர் ரிலீஸுக்கு பிறகு படத்தை பார்க்கும் ஆர்வம் இளம் ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. டீசருக்கு கிடைத்த வரவேற்பால் பார்ட்டி படக்குழு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது.

சத்யராஜ், நாசர், ஜெய்ராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ஷாம், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ், எடிட்டிங் பிரவீன் கேஎல். வெங்கட் பிரபுவின் படத்துக்கு முதன் முறையாக இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன்.

Link – https://youtu.be/eD_kKt_JeBw

Back To Top
CLOSE
CLOSE