Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

”எனது படத்தொகுப்பை சிறப்பாக்க சிவகார்த்திகேயன் ரசிகர்களை பின்பற்ற ஆரம்பித்தேன்”- படத்தொகுப்பாளர் ரூபன்.

‘வேலைக்காரன்’ படத்தின் ப்ரோமோக்கள் மக்களிடையே பிரபலமடைந்ததற்கு அதன் அற்புதமான படத்தொகுப்பு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது பலரை, இப்படத்தின் எடிட்டர் ரூபன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தூண்டியுள்ளது. முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணிபுரியும் ரூபன் வெற்றிகள் மற்றும் பாராட்டுகளை பெற்றும் நிதானத்தோடும் தெளிவோடும் உள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தை பற்றி எடிட்டர் ரூபன் பேசுகையில் , ” சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர். அவருடன் ‘ரெமோ’ படத்திற்கு பிறகு இது எனக்கு இரண்டாவது படம். ஆனால் ஒரு எடிட்டராக அவரை நான் ஒரு ஸ்டாராக தான் பார்ப்பேன். இந்த கண்ணோட்டம் எனது பணியை மேலும் சிறப்பாக்க உதவுகிறது. அவரது ரசிகர்கள் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய அவரது ரசிகர்களை பின்பற்ற தொடங்கினேன். இது எனது எடிட்டிங்கிற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதனை கதையோடு அழாகாக இணைப்பது ஒரு சவாலான காரியமே.

‘வேலைக்காரன்’ போன்ற நட்சத்திர பட்டாளம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை கொண்ட படத்தை எடிட் செய்வது எளிதான காரியமல்ல. கதைக்குள் பல பரிமாணங்கள் இருப்பதால் இந்த படம் சவாலாகவே இருந்தது. உணர்வுகள், ஜனரஞ்சக தன்மை மற்றும் சமுதாய பொறுப்பு ஆகிய அம்சங்களை சரியான கலவையில் தருவது எனது இலக்காக இருந்தது. ”

Back To Top
CLOSE
CLOSE