Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ஜெய் ஆகாஷ்-ன் ‘தனயன்’

ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ஜெய் ஆகாஷ் தயாரிக்கும் புதிய தமிழ் திரைப்படம் ‘தனயன்’. தனயன் என்றால் மகன் என்று பொருள். ஒரு மகன் எப்படி வாழ வேண்டும் எனவும், ஒரு மகன் எப்படி வாழ கூடாது எனவும் மனித ஒழுக்கத்தை சொல்லும் திரைப்படம் ‘தனயன்’.

இரு வேடங்களில் ‘ராமகிருஷ்ணா’ புகழ் ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி, ஆகியோருடன் சாம்ஸ், பவர்ஸ்டார், தினேஷ் மேட்னே,இந்து , கீர்த்தனா ,திலகவதி ,வேணி ,கானா பிரபா,சித்திரம் பாட்ஷா மற்றும் வில்லன் வேடத்தில் அமீத் ஆகியோர் நடிக்கின்றனர் . மிஸ் மும்பை ஏஞ்சல் சிங் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

U.K.முரளியின் அருமையான இசையில் 3 பாடல்கள் மற்றும் 4 சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இப்படம் திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது

தொழிற்நுட்ப கலைஞர்கள்

கதை – திரைக்கதை – இயக்கம் – N . J சதீஷ் /வசனம் – M தியாகராஜ் / ஒளிப்பதிவு தேவராஜ் / இசை – U.K.முரளி / நடனம் – ரமேஷ் ரெட்டி , ரமேஷ் கமல் / எடிட்டிங் – பிரேம் / ஆக்சன் – பாக்க்ஷி / மக்கள் தொடர்பு – செல்வரகு / இணைத்தயாரிப்பு – R . ராஜன் , M . கருப்பையா .

Back To Top
CLOSE
CLOSE