Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தரலாம், ஆனால் கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் – சிவகார்த்திகேயன்

வெற்றியும் நட்சத்திர அந்தஸ்தும் சிலருக்கு இயல்பாகவே அமையும் , சிலருக்கு கடும் உழைப்பின் மூலம் கிடைக்கும். அப்படியான உழைப்பு மூலம் தன்னை உயர்த்திக்கொண்டு வெற்றி பெற்றுவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அசுர வளர்ச்சி அனைவரும் அறிந்ததே. அவரது ‘வேலைக்காரன்’ படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் , ’24am ஸ்டுடியோஸ்’ R D ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் அனைவரையும் வாய் பிளக்க செய்துள்ளது. இதற்கு இயக்குனர் மோகன் ராஜாவின் வெற்றி பார்முலா , எல்லா வயது மக்களையும் கவர்ந்துள்ள சிவகார்த்திகேயனின் இமேஜ், அருமையான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மற்றும் தயாரிப்பாளர் R D ராஜா அவர்களின் பங்களிப்பு ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன.

‘வேலைக்காரன்’ குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில் , ” ‘அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தரலாம், ஆனால் கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் ‘ என்பதை நம்புபவன் நான். ‘வேலைக்காரன்’ படம் எனக்கு கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம். மோகன் ராஜா சாரின் இந்த அற்புதமான கதையில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு போட்டுளேன். ‘வேலைக்காரன்’ படத்தின் ஹீரோ கதைதான். இந்த ஹீரோவுக்கு ஈடு கொடுக்க நான் உள்ளிட்ட எல்லா நடிகர்களும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உழைத்துள்ளோம். எந்த ஒரு சமுதாயத்துக்கும் இதய துடிப்பாக இருக்கும் உழைக்கும் வர்கத்தை பற்றிய படம் இது. எல்லோரின் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த படம். இந்த படத்தின் ஒவ்வொரு நடிகரும் , தொழில்நுட்ப கலைஞரும் தங்களது பெஸ்டுக்கும் மேல் தந்துள்ளனர். இது போன்ற அணியுடன் பணிபுரிந்தது எனது அதிர்ஷ்டம். தயாரிப்பாளர் R D ராஜா அவர்களின் ஆதரவு, ஊக்கம், கனவு மற்றும் இயக்குனர் மோகன் ராஜா சாரின் கதை, எழுத்து மற்றும் அதை படமாக்கியுள்ள விதமே ‘வேலைக்காரன்’ படத்தை இவ்வளவு சிறப்பாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் ‘வேலைக்காரன்’ படத்தை ரசித்து, கொண்டாடி பாராட்டுவார்கள் என நம்புகிறேன் ”.

Back To Top
CLOSE
CLOSE