Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் !

க்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் படம் ‘டிராபிக் ராமசாமி’. இந்தப் படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்படும் படமாகும்.

இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய மனைவியாக ரோகினி நடிக்கிறார் . இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியவரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெளரவதோற்றத்தில் பங்குபெறுகிறார்கள்.

இவர்கள் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக இருக்கும்.

பிரகாஷ் ராஜ்
இப்போது ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷ்னராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

இதைப் பற்றிப் பிரகாஷ்ராஜ் கூறும் போது ” வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

“அவர் வரும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் ” என்று இயக்குநர் விஜய் விக்ரம் கூறுகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை குகன். S.பழனியும், பாடல்களை கபிலன் வைரமுத்துவும், இசையை ஹர ஹர மகாதேவகி புகழ் பாலமுரளி பாலுவும், எடிட்டிங் பிரபாகரும், கலையை வனராஜ் அவர்களும் கவனிக்கிறார்கள்.

Back To Top
CLOSE
CLOSE