Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

கிரிக்கெட் அணியை வாங்கிய ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ தயாரிப்பாளர்

இன்றைய சினிமா உலகில், படத்தின் கதையும் அதன் நடிகர்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது அப்படத்தின் விளம்பர யுக்திகள். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் , ஆறுமுக குமார் இயக்கத்தில் , ‘7 C’s Entertainment Private Limited’ மற்றும் ‘Amme Narayana Entertainment’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ இப்படத்தின் தயரிப்பாளர்கள் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய, மாபெரும் விளம்பர யுக்தியை கையாளவுள்ளனர். வரும் ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் விழாவில் பங்கேற்கவுள்ள அணிகளில் ஒன்றான ‘Ramnad Rhinos’ அணியை இவர்கள் வாங்கியுள்ளனர்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்குவது இதுவே முதல் முறை. இந்த ‘Ramnad Rhinos’ அணியின் கேப்டன் விஜய் சேதுபதி ஆவார். இந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவில்தான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா,மாபெரும் நட்சத்திர பட்டாளம் முன்னிலையில் நடைபெறவுள்ளது என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்த படத்தில் காயத்ரி மற்றும் நிஹாரிகா கோனிடேலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

Link- https://youtu.be/MG8EPFzxILY

Back To Top
CLOSE
CLOSE