Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பா.இரஞ்சித் ஒருங்கிணைப்பில் சென்னையில் முதல் முறையாக வரலாற்று இசை இணைவு “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்”!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி சென்னையில் 06-01-2018 அன்று நடைபெற இருக்கிறது. முன்னதாக, “கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் இசைக்கலைஞர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு கலைஞர்களை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பா.இரஞ்சித் பேசியதாவது,

“நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த முயற்சி தான் இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி. இதில் பங்குபெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லோருமே அவரவர் பகுதிகளில் மிக பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளோம்.

மக்களுக்கான அரசியல் பேசவும், மக்களின் பிரச்சனைகளைப் பேசவும் கலையை பயன்படுத்த வேண்டும். சாதி, மதமற்ற இணக்கம் கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும். இந்த சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது போலவே கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகத்தின் எல்லா கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான தேவை இங்கு இருக்கிறது. அயோத்திதாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும்.

கானா என்பது மக்களின் இசை, மூடப் பழக்கவழக்கங்களை எதிர்க்கிற இசை. அது போல தான் ராப் இசையும். அது கறுப்பர்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்டங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது.
அதனடிப்படையில் பார்த்தால் ராப் இசையும், கானாவும் வேறு வேறில்லை. இரண்டுமே மக்களின் வலியை, துயரத்தை பேசக் கூடியவை. இரண்டையுமே இணைத்து இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி
அரங்கேற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 பாடல்கள் பாடப்பட இருக்கிறது. எல்லா விதமான உணர்வுகளோடும் கூடிய பாடல்களாக அவை இருக்கும். இந்நிகழ்ச்சி, தொல்குடி மக்களின் இசையை உலகிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகும். இன்னும் தமிழகத்தின் மூலைகளில் பரவிக் கிடக்கிற எளிய மக்களின் அத்தனை இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும் யோசனையும் இருக்கிறது” என்று பேசினார்.

மிகப்பெரிய திறந்தவெளி அரங்க இசை நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்விற்கு கட்டணம் ஏதும் இல்லை. அனைவருக்கும் அனுமதி இலவசம்.

Back To Top
CLOSE
CLOSE