Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

சீதக்காதி – புதுமையான, வித்தியாசமான ஒரு படம்

தமிழ் சினிமா ரசிகர்களும் திரைத் துறையினர் பல்வேறு காரணங்களுக்காக ஒரு சேர பாராட்டக்கூடிய, பெருமையுடன் பார்க்கக்கூடிய ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதற்கு ஒரு முதன்மை காரணம் விஜய் சேதுபதியின் பல்வேறு தளங்களில் கதை கதாபாத்திரம் தேர்வு செய்யும் தன்மையும், அவற்றை சிறப்பாக செய்து முடிக்கும் திறமையுமே. அவருடைய அசுர வளர்ச்சியும், ரசிகர் பட்டாளமும் அசாதாரணமானது. எல்லைகளை கடந்தும் அவரது ரசிகர் பட்டாளம் விரிவடைந்துள்ளது. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் சீதக்காதி மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் படம். இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான படமாக சீதக்காதி உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியின் 25வது படமான இந்த படத்தில், அவரின் கதாபாத்திரம் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பேசன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

படத்தை பற்றி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும்போது, “எல்லா வகைகளிலும் சீதக்காதி புதுமையான, வித்தியாசமான ஒரு படம். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை இதயத்தையும், ஆன்மாவையும் கொடுத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. தனித்துவமான கதை, கதாபாத்திரங்களை எடுத்து செய்யும் விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களுக்கே இது வித்தியாசமான கதாபாத்திரம் தான். விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட சரியான நேரத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். அதை வெளியிட விஜய் சேதுபதியின் பிறந்த நாளான ஜனவரி 16ஐ விட சிறப்பான நாள் வேறென்ன இருக்க முடியும். ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைக்கும். விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்களால் நம்ப முடியாத அளவுக்கு ஆர்வத்தை தூண்டும். சீதக்காதி படத்தை நாங்கள் தயாரித்தது மிகவும் பெருமையான விஷயம்” என்றார்.

Back To Top
CLOSE
CLOSE