Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

ஜெயிக்கப்போவது யாரு படத்தின் இசையை இசையமைப்பாளர் D.இமான் வெளியிட்டார்

டிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் “ ஜெயிக்கபோவது யாரு “

இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார். மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் – சக்தி ஸ்காட்

இசை – சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின்

படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது…

கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார்.

இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன்.

இதுவரை ஒரு படம் எடுப்பதற்கான 15 துறைகளையும் ஒரே ஒரு மனிதன் ஜாக்கிசான் அவர்கள் “ ஜோடியாக் “ என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012 ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார்.

அதற்கு பிறகு நான் 29 துறைகளில் பணியாற்றி இந்த படத்தை முடித்துள்ளேன். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையும் இடம்பெறும் என்று நம்பிக்கையுடம் கூறுகிறார் இயக்குனர் சக்திஸ்காட்.

இந்த படத்தின் இசையை நூறு படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் வெளியிட்டார்.

படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.​

Back To Top
CLOSE
CLOSE