Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 27 ரிலீசாகும் ‘Mr.சந்திரமௌலி’ !!!

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘Mr.சந்திரமௌலி’. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ‘Mr.சந்திரமௌலி’ வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். தொடர்ந்து 18 மணி நேரம் நடந்துள்ள இந்த படப்பிடிப்பில் துளியும் சோர்வாகமல், முழு ஓத்துழைப்பையும் தந்து அசத்தியுள்ளார் கதாநாயகன் கவுதம் கார்த்திக். அவரது இந்த உழைப்பை ‘Mr.சந்திரமௌலி’ அணியும் இப்படத்தின் சண்டை இயக்குனர் ‘ஸ்டண்ட்’ சிவாவும் பாராட்டியுள்ளனர். இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 27 ரிலீசுக்கு ‘Mr.சந்திரமௌலி’ வேகமாக தயாராகிவருகிறது.

இந்த படத்தை BOFTA media works India private limited சார்பில் ‘Creative Entertainers and Distributors’ தயாரிக்கின்றனர். இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ் பிரதாப், சதிஷ், விஜி சந்திரசேகர் மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் CS இசையில் , ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில், TS சுரேஷ் ஒளிப்பதிவில் , ஜாக்கியின் கலை இயக்கத்தில் ‘Mr.சந்திரமௌலி’ உருவாகிவருகிறது.

Back To Top
CLOSE
CLOSE