Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – ஒரு முழு நீள காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம்

வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதில் அசத்தி பெரிய வெற்றிகளை தொடர்ந்து சுவைப்பவர் இந்திய சினிமாவிலேயே சிலர் தான். இந்த பட்டியலில் விஜய் சேதுபதி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரது அடுத்த படமான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை ‘7C’s Entertainment Private Limited’ மற்றும் ‘Amme Narayana Entertainment’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ குறித்து அதன் இயக்குனர் ஆறுமுக குமார் பேசுகையில் , ” இது ஒரு முழு நீள காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம். இந்த கதை களம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தோம். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது பெஸ்ட்டை தந்துள்ளனர். விஜய் சேதுபதி அவர்களுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவமாகும். அவர் எவ்வளவு அருமையான நடிகர் மற்றும் எவ்வளவு எளிமையான மனிதர் என்பதை நான் சொல்லிதான் தெரியவேண்டும் என்பதில்லை. தனது அசுர நடிப்பால் இந்த கதையை வேற லெவெலிற்கு அவர் உயர்த்தியுள்ளார். இப்படத்தில் கவுதம் கார்த்திக்கின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். அதே போல் தான் காயத்ரி மற்றும் நிஹாரிகாவில் கதாபாத்திரங்கள் மற்றும் இவர்களின் நடிப்பும். ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கத்தில் எங்கள் படத்தை கண்டு ரசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன் ”

இந்த படத்தை ‘Clap Board Production’ நிறுவனம் சார்பாக திரு.V. சத்தியமூர்த்தி அவர்கள் தமிழகமெங்கும் முன்னூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறார்.

Back To Top
CLOSE
CLOSE