Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலை கூறும் “துலாம்”

‘வி மூவிஸ்’ சார்பில் விஜய் விக்காஷ் தயாரிப்பில் ராஜ நாகஜோதி இயக்கியிருக்கும் படம் ‘துலாம்’ . இப்படம் போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும், மனச்சாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறையபேர் உள்ளார்கள் என்பதையும் விவரிக்கும் படம் தான் இந்த துலாம் .

இப்படத்தில் நாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்க நாயகியாக டெப்லினா ஜாக்சி நடிக்கிறார்கள் . இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங் , மோனா பிந்ரே மற்றும் ‘ஈரமான ரோஜாவே’ புகழ் சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டிச்சேரி மற்றும் ஊட்டியில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. இதில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் விஜய் விக்காஷ் நடிக்கிறார். கானா பாலா ஒரு பாடலை எழுதி பாடி நடித்தும் உள்ளார். இந்த படத்தில் தான் நா. முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு இசை அலைக்ஸ் பிரேம் நாத், ஒளிப்பதிவு கொளஞ்சி குமார், எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.

பேனர்: வி மூவிஸ்
தயாரிப்பு: விஜய் விக்காஷ்
இயக்கம் : ராஜ நாகஜோதி
இசை : அலக்ஸ் பிரேம் நாத்
ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார்
எடிட்டிங் : சுரேஷ் அர்ஷ்
நடனம் : ஷங்கர்
சண்டைப்பயிற்சி: ரமேஷ்
பாடல்கள் : நா.முத்துக்குமார், கானா பாலா , நதி விஜயகுமார்.
கலை : ஜெய வர்மா
ஸ்டில்ஸ்: ஷிவா
டிசைன்ஸ்: சசி & சசி
மேனேஜர்: குணசேகரன் ,தண்டபாணி

Back To Top
CLOSE
CLOSE