Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்கை ‘ஸ்கெட்ச் ‘ பட இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்!

இன்று மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது மொபைல் போன் . கையளவில் உலகைச் சுருக்கி வைத்துள்ள அந்த விஞ்ஞானக் கருவியை பயன்படுத்துபவர்களின் மனப்பான்மையை , நோக்கத்தைப் பொறுத்து நல்லதையோ கெட்டதையோ அடைய முடியும். அப்படிப்பட்ட செல்போன் தவறுதலாக த் தொலைந்து விட்டால் , வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக் கூடாது என்று எல்லாவற்றையும் ‘ லாக்’ செய்து வைத்திருப்பார்கள் . அதில் பாஸ்வேர்டு தெரிந்த செல்போனை உரிமையாளர் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி கால் செய்யும் வசதியையும் லாக் செய்திருப்பார்கள்.

மொபைல் வைத்திருக்கும் உரிமையாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து அவருக்கு உதவும் எண்ணத்தில் மொபைல் போனை எடுத்து தொடர்பு கொள்ள முயன்றால் அது லாக் ஆகியிருக்கும். இதனால் சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு தொடர்பு கொள்ள முடியாது. சில நேரம் அவர் யாரென்று தெரியாமல் அவரது உயிரைக் காப்பாற்றக்கூட முடியாமல் போய் விடும். இப்படிப்பட்ட கருத்தை மையமாக வைத்துத்தான் ‘அன்லாக் ‘ குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்கியிருப்பவர் மாஸ் ரவி. இவர் திரைப்பட நடிகர் .அண்மையில் வெளிவந்த விக்ரமின் ‘ ஸ்கெட்ச் ‘ படத்தில் கூட முக்கியமான வேடமேற்று நடித்துள்ளார். இசை – கிறிஸ்டி, ஒளிப்பதிவு – சரண் மணி, படத்தொகுப்பு – ஸ்ரீ ராஜ் குமார், டிசைன் – சரத்குமார், இனை தயாரிப்பு – பூபாலன். லைக் அண்ட் ஷேர் மீடியா சார்பில் இதைத் தயாரித்து இருப்பவர் Pro சக்தி சரவணன்.

இக் குறும்படத்தில் மாஸ் ரவி, நடிகர் நாகா, நடிகர் ஆல்வின், சக்தி சரவணன் , பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சென்னை நகரின் ஜன சந்தடியுள்ள போக்குவரத்து நெருக்கம் உள்ள இடங்களில் சிரமப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

சில நிமிடங்கள் ஓடும் ‘அன்லாக்’ குறும்படம் பார்ப்பவர்களை நெடுநேரம் யோசிக்க வைக்கும். செல்போனில் எது எதை மூடி வைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஊட்டும். இதை படிப்பினையூட்டும் குறும்படம் என்றும் கூறலாம்.

‘அன்லாக் ‘குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் கை ‘ஸ்கெட்ச்’ படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்.

Back To Top
CLOSE
CLOSE