Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

ஒரு நட்சத்திர பட்டாளமே சிறப்பு தோற்றத்தில் தோன்றும் “புறா பறக்குது”

மறைந்த இயக்குநர் ஜீவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிவர் ஆ.இலட்சுமி காந்தன். பசுபதி, அஜ்மல் நடித்த டாக்சி 4777 படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக தற்போது ‘புறா பறக்குது’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் புதுமுகங்களான ஆருண், கெளதம் ஆகியோரை அறிமுகப்படுத்துகிறார். மற்றும் பப்லு, பிரியா, சுப்புலட்சுமி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜெய் கிரிஷ் இசையமைக்க, கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

காதல் என்பது அமுதசுரபி மாதிரி.. அதனால் தான் காதலை மையமாக ஆயிரக்கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஆயிரம் படங்கள் உருவாகவும் இருக்கின்றன.. அந்தவகையில் ஒரு காதல் கதையைத்தான் கையில் எடுத்துள்ளார் இலட்சுமி காந்தன்.

முதல்காட்சியில் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை பார்த்ததுமே இவள் தான் தனக்கானவள் என முடிவு செய்யும் இளைஞன், கடைசி காட்சியில் அவளிடம் ஐ லவ் யூ சொல்கிறான். இதுதான் படத்தின் கதை. இந்த காதலை எப்படி சொல்கிறான், காதலியின் மனதை எப்படி வெல்கிறான் என்பதைத்தான் திரைக்கதையில் வித்தியாசப்படுத்தி காட்ட இருக்கிறாராம் இலட்சுமி காந்தன்.

இந்தப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆர்யா, ஷ்யாம், பூஜா, பிரசன்னா, பசுபதி, சிம்ரன், அஜ்மல், மீனாட்சி, அசோக், மைக்கேல், VJ முரளி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.. அது எதற்காக என்பது சஸ்பென்ஸ்..

இந்தப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் ;

தயாரிப்பாளர் : இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி
இசை : ஜெய் கிரிஷ்
ஒளிப்பதிவு : கார்த்திகேயன்
எடிட்டிங் : ரமேஷ் மணி
பாடலாசிரியர் : பிரியன்
நடனம் : தினேஷ், சோபி
சண்டை பயிற்சி : T. தியாகராஜன்
கலை : தோட்டாதரணி
ஒலிப்பதிவு : லட்சுமி நாராயணன்
மக்கள் தொடர்பு : செல்வரகு
தயாரிப்பு மேற்பார்வை : முருகபூபதி

Back To Top
CLOSE
CLOSE