Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஒரு காட்சிக்காக மொட்டை அடித்த கதாநாயகன்

உதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த உத்தரவு மகாராஜா-வின் இறுதிகட்ட கிராபிக்கிஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீர்ர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக நேற்று நிறைவுற்றது. படத்திற்கு முக்கியமானது இதன் கிராபிக்கிஸ் என்பதால் சில வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவைக்க பட்டுள்ளனர் மற்றும் ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் முக்கியமாக கிராபிக்கிஸ் மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த காட்சியில் நடித்தார்.

இத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது கெட்-அப் ஆகும். இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவைசரளா, M.S.பாஸ்கர், குட்டிபத்மினி, தனஞ்செயன் சோனியா போஸ், எடிட்டர் டான் பாஸ்கோஉள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்க மற்றும் புது முக கதாநாயகிகள் பிரியங்கா, சேரா, மதுமிதா நடிக்க, அறிமுக இயக்குனர் ஆஸிப் குரைஷி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய. நா முத்துகுமாரின் பாடல் வரிகளுக்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, எடிட்டர் ஆண்டனியின் உதவியாளர் சத்யநாராயணன் எடிட்டிங் செய்ய, திரை துறையினரின் ஸ்டிரைக் முடிவுற்றவுடன் படம் வெளிவர இருக்கும் தேதி அறிவித்து வெளிவர இருக்கிறது “உத்தரவு மகாராஜா”

Back To Top
CLOSE
CLOSE