Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் கிளாப் போர்டு வி சத்யமூர்த்தி

சில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்..

அதேபோல, மிக மிக அவசரம் படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது.

பார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம் சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெளியிட முன் வந்ததிலாகட்டும்,

கோலிசோடா2 டத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளவரும், முக்கியமான திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு, அதைத் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்வதில் நல்ல பெயர் எடுத்திருப்பவருமான கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் வி சத்தியமூர்த்தி இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து வெளியிட முன் வந்திருப்பதிலாகட்டும்,

மிக மிக அவசரம் படம் வெளிவரும்போது ஒரு அதிர்வை ஏற்படுத்தும் என உறுதியாகச் சொல்லலாம்.

அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.

ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். மிக மிக அவசரம் படத்தில் இவர்கள் கதா நாயகன் கதா நாயகி என்றாலும் ஒரு காட்சியில் கூட காம்பினேஷன் கிடையாது என்பது அற்புதமான திரைக்கதையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார்.

வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஆண்டவன்கட்டளை அரவிந்த், ஈ. ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

யெஸ்… இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியுடன் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மிக மிக அவசரம் படத்தை உலகம் முழுக்க வெளியிட இருக்கிறது.​

Back To Top
CLOSE
CLOSE