Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

மே மாதம் முதல் வாரம் Mr.சந்திரமௌலி ரிலிஸ்

எந்த தொழில் நமக்கு சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் ‘Mr.சந்திரமௌலி’. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக்,வரலக்ஷ்மி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘Mr.சந்திரமௌலி’ முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதளை பின்பற்றிவரும் அணியாகும். இந்த படத்தை BOFTA Media works India Private Limited சார்பில் ‘Creative Entertainers and Distributors’ நிறுவனம் தயாரிக்கின்றது.

இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , ” படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். கிராபியில் காதல் பாடலையும், பேங்காக்கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர் . எங்கள் படக்குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர். படத்தின் Post production பணிகளை உடனே துவங்கி கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்கு தயாராக்கவுள்ளோம். ‘Mr.சந்திரமௌலி’ படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்த படத்தை மே மதம் முதல் வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

சாம் CS இசையில், ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில், T S சுரேஷ் படத்தொகுப்பில், ஜக்கியின் கலை இயக்கத்தில் ‘Mr.சந்திரமௌலி’ உருவாகிவருகிறது. நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சதிஷ்,விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Back To Top
CLOSE
CLOSE