Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

படப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு

ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.

இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

பிருத்வி ராஜன், வீணா, ஏ. வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார்.

படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம் எஸ் குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர்.

அவர்கள் அனைவருக்கும் கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார். இரவு விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிடாவிருந்து களைகட்டியது. மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அதோடு இருபத்தைந்து பேருக்கான உணவு, பொட்டலமாக்கப்பட்டு சாலையோரம் இருக்கும் முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் படக்குழுவினர் வழங்கினர்.

ஏற்கனவே, நடைபெற்ற படப்பிடிப்பின் காட்சிகள் எடிட்டிங், டப்பிங், உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து தயாராக இருக்கிறது. இப்போது எடுத்த காட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டால் படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிடும்.

“படத்தை வெகு விரைவாக நிறைவு செய்துகொடுத்தார் இயக்குநர் மதுராஜ். அடுத்தடுத்து நல்ல படங்கள் இயக்கும் இயக்குநராக அவர் வருவார். அவருக்கும் , விரைந்து முடிக்க உதவிய படக்குழுவினருக்கும் எங்களது நன்றிகள்” என்றனர் ஜெய் சந்திரா சரவணக்குமாரும், அவரது கணவர் எம் எஸ் குமாரும்.

Back To Top
CLOSE
CLOSE