Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

தந்தையை போலவே ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முகபாண்டியன்

தனது ரசிகர்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்த இணையதளம் தொடங்கிய நடிகர் சண்முக பாண்டியன்

கேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார். சகாப்தம் திரைப்படத்தின் மூலம் சண்முகபாண்டியன் அறிமுகமானார். திரையுலகே சண்முகபாண்டியனை அன்புடன் வரவேற்றது. தனது முதல் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் சண்முகபாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரைவீரன் திரைப்படத்தால் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறார்.

திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார். இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி​ 2018​
நாளை காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.

திரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு. நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.

Back To Top
CLOSE
CLOSE