Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..!

சினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.. மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்..

அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி..! .. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர்.
திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படக்களை தயாரித்தவர்.
தற்சமயம் இருவரும் பிரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் Resort and Restaurant நடத்தி வருகிறார்கள்.

ஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன்.

பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி..ஆர்.கிருஷ்ணசேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீண் எடிட்டராகவும் இதில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிச்சைக்காரன், சலீம் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப்படத்தின் கலை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இப்படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் சொந்த Resort ஆன Tun L Hotel House Boat Resort-ல் உயர் திரு. ராஜேஷ் தாஸ் I.P.S ( ADDG Prohibition Enforcement, Tamilnadu ) அவர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE