Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

தன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா

தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிரூபித்து இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் “பியார் பிரேமா காதல்” படத்தில் இடம் பெற்று உள்ள high on love பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா , தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் ( இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிட தக்கது.

யுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது “இந்த படம் ஒரு திரில்லர் படம்.திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம்.இந்த கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பணியாற்றினோம். பிண்ணனி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபரிதமானது. ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி ஏமாற்றமளித்து விட்டது. ஆகவே ஒரு பாடல் புரமோஷன் பாடலாகவாவது இருக்கட்டும் என்று ஒரு பாடலை சேர்த்தோம். அதில் அவரே முன் வந்து நடித்தும், நடனம் ஆடியும் தந்தது “பேய் பசி படத்துக்கு மிக பெரிய பலம்.
கதா நாயகன் ஹரி கிருஷ்ண பாஸ்கர் உடன் விபின், நமிதா, கருணாகரன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர்.

Back To Top
CLOSE
CLOSE