Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

காதல் சார்ந்த படங்களுக்கு இளமை ததும்பும் நாயகன் ,நாயகி, இளமையான சிந்தனைகள் உடைய ஒரு இளம் இயக்குநர் ஆகியோருடன் காதல் படங்களுக்கு பிரசித்தமாக இசை அமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்தால் அந்த படத்துக்கு “பியார் பிரேமா காதல்” என்ற சர்வ மொழி அந்தஸ்து கிட்டி விடும். அதிலும் யுவன் ஷங்கர் ராஜாவே தயாரிப்பாளராகவும் இருந்து விட்டால் அந்த படத்துக்கு இளைய சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம் நூறு மடங்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

“இயக்குநர் இலன் என்னிடம் கதை சொல்லும் போதே இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும்,ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன்.ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் இயக்குனர் உட்பட அனைத்து கலைஞர்களின் உழைப்பை கண்டு பிரமித்து போனேன். ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்கு பிறகு மிக பெரிய, அவருக்கே உரிய அந்தஸ்துக்கு உயர்வார்.ரைசா வில்சன் ரசிகர்களை நிச்சயம் கவர்வார். அவர்களுக்குள் இருக்கும் “chemistry” தான் “high on love” பாடல் இணைய தளத்தில் குறுகிய காலத்தில் 84 லட்சம் பார்வையாளர்களை சென்று பெரும் வெற்றி பெற காரணம் என்றால் மிகை இல்லை. பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அசர்பேஜான் என்ற நாட்டுக்கு சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அசர்பேஜான் தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள்.இந்த யுகத்துக்கு “பியார் பிரேமா காதல்” என்று நான் உறுதியாக கூறுவேன் என்று உறுதி படக் கூறினார் யுவன் ஷங்கர் ராஜா.

Y S R films மற்றும் கே productions சார்பில் யுவன் ஷங்கர் ராஜா, எஸ் என் ராஜ ராஜன், இர்பான் மாலிக் ஆகியோர் இணைந்து வழங்கும் “பியார் பிரேமா காதல்” படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜு பட்டச்சாரஜி, பட தொகுப்பு முத்து குமரன்.

Back To Top
CLOSE
CLOSE