Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”

ஜெய் ஆகாஷின் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் தான் ‘சென்னை டூ பாங்காக்’.இதில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி நடிக்கிறார்கள். யோகிபாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன்,கும்கி அஸ்வின்,இந்து, திலகவதி, கிருஷ்ணவேணி ஆகியோருடன் வில்லன் வேடத்தில் பொன்னம்பலம் மற்றும் தினேஷ் மேட்னே ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதைச்சுருக்கம் : இந்தியாவில் இருந்து பாங்காங்கிற்கு கடத்தப்படும் பெண்களை இளைஞன் ஒருவன் அந்த பெண்களை மீட்டுவர தனி ஆளாக கிளம்புகிறான்.. அங்கே சென்றதும் தான் அந்த பெண்கள் அனைவருக்கும் தீவிரவாத பயிற்சி அளித்து மீண்டும் இந்தியாவுக்கே நாசகார வேலைகளை செய்ய தயார்படுத்துகிறார்கள் என்கிற அதிர்சசியான விபரம் தெரிய வருகிறது.. அந்த கூட்டத்தின் சதியை முறியடித்து அந்த பெண்களை இந்தியாவிற்கு அந்த இளைஞன் எப்படி மீட்டு வருகிறான் என்பது தான் படத்தின் கதை. இதை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதமாக ஜனரஞ்சகமாக சொல்லப்பட்டு இருக்கிறது.விறு விறுப்பனா சண்டை காட்சிகளும் இடம்பெறுகிறது .

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், ஸ்ரீலங்கா தாயலாந்து போன்ற இடங்களில் நடைபெறுகிறது. U.K.முரளியின் இசையில்,தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய,, இயக்குனர் சதீஷ் மற்றும் சந்தோஷ் இருவர் இயக்குகிறார்கள் .

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து – இயக்கம் ; சதீஷ் மற்றும் சந்தோஷ்
இசை ; U K முரளி
ஒளிப்பதிவு ; தேவராஜ் – பாலா

Back To Top
CLOSE
CLOSE