Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ள பார்ட்டி

‘வெங்கட் பிரபு’ என்ற பெயர் உச்சரிக்க படும் போதே இரு சிறு புன்னகையும் உங்கள் உதட்டில் பிறக்கும்.அதற்கு காரணம் அவர் இயக்கிய திரைப்படங்கள் மற்றும் நிச்சயமாக, வெங்கட் பிரபு டீம் போன்ற ஒரு ஜாலியான டீம் தான். அவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் முன்பே, அவருடைய இசை ஆல்பங்களைப் பெறுவதற்கு நாம் மிகவும் ஆர்வமாக உள்ளோம். முதல் முறையாக, அவரது தம்பி பிரேம்ஜி அமரன் இந்த படத்தில் இசை அமைப்பாளராக வெங்கட் பிரவுடன் இணைவது அதிக ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. வெங்கட் பிரபு கோலிவுட்டின் மிக அழகிய சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை ஒரு பாடல் பாட அழைத்து வந்திருப்பதன் மூலம் அதை நிரூபிக்கிறார். இருவரும் சமீபத்தில் ‘சா சா சாரே என்ற துள்ளலான பாடலை பதிவு செய்துள்ளனர். ஸ்டுடியோவில் அவர்கள் பாடல் பாடிய அந்த ரெக்கார்டிங் வீடியோ ஏற்கனவே வைரல் ஆகியுள்ளது.

“பேச வார்த்தைகளே இல்லை. இந்த அழகான, அன்பான சகோதரர்களின் புகழ், நேரம் மற்றும் அவர்களது குரல் ஆகியவற்றை எங்களுக்கு அளித்தது எங்கள் குழுவுக்கு பார்ட்டி நேரமாக அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு, இந்த கூட்டணிக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு, எங்கள் வணிக கூட்டாளிகளுக்கும் பார்ட்டி டைம் தான் என பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி என மிக முக்கிய நடிகர்களுடன் உருவாகியுள்ள இந்த படம் ஏற்கனவே இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்தத் திரைப்படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரித்திருக்கிறார். கேங்க்ஸ்டர், நகைச்சுவை படமான இந்த பார்ட்டி, முழுக்க ஃபிஜி தீவில் படமாக்கப்பட்டுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE