Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அர்ஜுன் உதய் – மாளவிகா வேல்ஸ் நடிக்கும் “அழகு மகன்”

அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “அழகு மகன்” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடிக்கிறார்.

மற்றும் இளவரசு ராஜ்கபூர் ஜி.எம்.குமார்,சிங்கம்புலி,பவன் சேரன்ராஜ் செந்தி நித்திஸ் விசித்திரன் வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள்

ஒளிப்பதிவு – அகு அஜ்மல்

இசை – ஜேம்ஸ் வசந்தன்

பாடல்கள் – யுகபாரதி, தாமரை,மோகன்ராஜ்.

கலை – முருகன்

எடிட்டிங் – மகேஷ்.G.K

சண்டை பயிற்சி – பயர் கார்த்திக்

நடனம் – ராதிகா.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அழகன் செல்வா… இவர் இயக்குனர் யார் கண்ணன், கரு.பழனியப்பன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

இவர் இயக்கும் முதல் படம் இது.

தயாரிப்பு – செல்வி ராஜேந்திரன், ஞானதேஸ் அம்பேத்கார்

படம் பற்றி இயக்குனர் அழகன் செல்வாவிடம் கேட்டோம்…

இது ஒரு பக்கா கமர்ஷியல் படம்.

தென்மாவட்ட மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் பிரதி பலிக்கும் படம்.

அன்பை பிரதிபலிப்பதும் அராஜகத்தை எதிர்த்து வெகுண்டெழுவதும் அவர்களது இயல்பு தென்மாவட்ட மண்ணின் மகிமையையும் அதன் மக்களின் கலாச்சாரத்தையும் இதில் காட்டி இருக்கிறோம். அர்ஜுன் உதய் மற்றும் அவர்களது நண்பர்களும் எதிர்கால சிந்தனை எதுவுமின்றி ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். நான்கு நண்பர்களும் நான்கு விதமான வாழ்க்கை சூழ் நிலையில் வாழ்பவர்கள்.

அர்ஜுன் உதய்க்கும் மாளவிகா வேல்ஸ்க்கும் அழகான காதல் ஒரு பக்கம்..

இதற்கிடையே அர்ஜுன் உதய் ஒரு பிரச்சனையில் சிக்க, அதனால் அவனது வாழ்க்கையில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படுகிறது

அவனுக்கு மட்டுமல்லாமல் அவனது நண்பர்களுக்கும் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது என்பதும் கதை.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கிறது. .

படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம் தேனி போடி கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

ஆகஸ்ட் 3 ம் தேதி படம் வெளியாகிறது.

படத்தை பார்த்த பிரபல விநியோகஸ்தர் ஸ்ரீ முருகன் சினி ஆர்ட்ஸ் செல்வம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் என்றார் இயக்குனர்.

Back To Top
CLOSE
CLOSE