Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.

83 world cup, என் டி ஆர் சுய சரிதை ஆகிய படங்களை தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தை தயாரிக்கிறது

இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி இவர். ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவருடைய சுய சரிதையை படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர்.
“டாக்டர் ஜெ ஜெயலலிதா மேடம் தேசிய அளவில் பிரசித்தி பெற்ற பிராந்திய தலைவர்களில் முக்கியமானவர்.உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம்.திரை துறையிலும்,அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்த படத்தை சமர்பிக்கிறோம்.அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த படத்தை துவக்க இருக்கிறோம். அன்றே first look கூட வெளியிட இருக்கிறோம்.” என்கிறார் vibri மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிருந்தா பிரசாத்.

தமிழில் பல்வேறு வெற்றி படங்களை தந்த இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
“எங்களது vibri நிறுவனத்துக்கு சுய சரிதைகளை படமாக்குவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்த கதைக்கான pre production பணிகளில் இயக்குனர் விஜய் ஈடுபட்டு வருகிறார்” என்கிறாய் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி.
தென்னிந்தியாவின் பிரதான நட்சத்திரங்களுடன், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.
Vibri media நிறுவனத்தினருக்கு இந்த வருடம் முக்கியமான வருடமாகும். பல்வேறு வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்ப்பதோடு,83 உலக கோப்பை என்கிற ஹிந்தி படத்தையும் கபீர் கான் இயக்கத்தில் , ரன்வீர் சிங் கபில்தேவ் வேடத்தில் நடிக்க தயாரிக்கும் இந்த நிறுவனம், “என் டி ஆர் சுய சரிதை” திரைப்படத்தை பாலகிருஷ்ணா நடிக்க, கிரிஷ் இயக்கத்தில தயாரிக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய அனைத்து படங்களும் 2019 ஆம் ஆண்டு வெளி வரும் என்பதே உற்சாகமான சேதி.

Back To Top
CLOSE
CLOSE