Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கனா படத்துக்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்!


மரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ்,பிரபல இசை அமைப்பாளர் அனிருத்தின் குரலில் ” கனா” படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார்.

“அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது “என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கனா’ படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு. “நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஆனால் நாங்கள் அதை பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் திபு.

மேலும், அனிருத் பல நாட்டுப்புற பாடல்களை பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். இந்த அழகான நாட்டுப்புற பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் நடிக்க படமாக்கப்படுகிறது. தர்ஷன் ஐஸ்வர்யாவை காதலிக்கிறார், அவர் தனது காதலி ஐஸ்வர்யாவை நேசிப்பதை சொல்லும் பாடலாக இது அமைந்திருக்கிறது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் கனா படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மிகப்பிரமாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது. ‘சிவகார்த்திகேயன்’ சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கையின் மூன்று முக்கிய தூண்களான இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் இந்த படத்தின் இசையை வெளியிடுவார்கள் என அறிவித்திருந்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு கௌரவ விருந்தாளியாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.அவரே இசையை வெளியிட போகிறார் என்பதுக் குறிப்பிடடத்தக்கது.

இயக்குனர் அருண்ராஜா காமராஜின் கனா ஒரு உண்மைக்கதை அல்ல. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக சாதிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவை சொல்லும் ஒரு கற்பனையான படம்.

Back To Top
CLOSE
CLOSE