Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

தினேஷ் மாமியாரானார் தேவயானி


களவாணி மாப்பிள்ளை படத்தில்

தினேஷ் மாமியாரானார் தேவயானி

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரிக்கிறார்

தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு / இசை – என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத் / கலை – மாயா பாண்டி

எடிட்டிங் – பொன் கதிரேசன் / நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன் / நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட்

இணை தயாரிப்பு – திருமூர்த்தி

தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.

படம் பற்றி இயக்குனர் காந்தி மணிவாசகம் அவர்களிடம் கேட்டோம்…

என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார்..மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல் ,நிறைய காமெடி வைத்திருப்பார்…அதன் படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன். பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது. ஜெயித்திருக்கிறது. மாமியார் மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும்…அமோக வெற்றி பெறும். அப்படித் தான் இது உருவாக்கப் பட்டிருக்கிறது.

தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்ட போது தயங்கினார்.. முழு கதையையும் கேட்ட உடன் ஓ.கே.சொன்னார்.அந்தளவுக்கு மாமியார் மருமகள் பிரச்சனையை இதில் கையாண்டிருக்கிறோம். ஜாலியான பொழுது போக்கு படமாக களவாணி மாப்பிள்ளை உருவாகி இருக்கிறது. படம் இம்மாதம் வெளியாகிறது என்றார் இயக்குனர் காந்திமணிவாசகம்.

Back To Top
CLOSE
CLOSE