Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Vision I medias சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும்”காதலில் தேடி நித்யா-நந்தா”

குறும்பு ஒரு பாடம் என்றால் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அதில் பண்டிதர்கள் என கூறலாம். “திரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தின் மூலம் இளம் ரசிகர்களின் பேராதரவு பெற்ற இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. Vision I medias சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் இந்த படத்துக்கு “காதலில் தேடி நித்யா-நந்தா” என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த தலைப்பு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

” இந்த படத்தின் நாயகன் நாயகியின் பெயர் நித்யா மற்றும் நந்தா. காதலை தேடி பாரெங்கும் தேடும் ஒரு இளம் ஜோடியின் கதைதான் “காதலை தேடி நித்யா நந்தா” . வித்தியாசமான கதை களங்களை தேர்ந்து எடுக்கும் ஜி வி பிரகாஷ் இந்த படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம் , விரைவில் தொடர் அறிவிப்புகள் படத்தை பற்றி வரும்.ரசிகர்களுக்கு ஒரு உத்திரவாதம்,இந்த படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும்.அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில்,லால்குடி இளையராஜா கலை அமைப்பில். ஜி வி பிரகாஷ் கதாநாயகன் , இசை அமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகள் மேற்கொண்டு உள்ளார்.

Back To Top
CLOSE
CLOSE