Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியான தமிழ் பேசும் நடிகை!

சின்னத்திரையில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை பிரியா பவானி சங்கர். சினிமாவில் அறிமுகமான பிறகு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார். அதோடு பல நல்ல பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றன. அடுத்து அதர்வா முரளி நடிக்க, ஸ்ரீகணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

பல நடிகைகளை படத்தின் வியாபாரத்திற்காக மார்க்கெட் அடிப்படையில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் தான் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் நல்ல நடிகையை, அறிமுக நடிகையாக இருந்தாலும் ஒப்பந்தம் செய்ய முன்வருவார்கள். அந்த வகையில் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் தன்னை நிரூபித்தவர் பிரியா பவானி சங்கர்.

“இது முற்றிலும் உண்மை, கதை சொல்லும் போது நானே அதை கவனித்தேன். பொதுவாக, வளர்ந்து வரும் காலகட்டத்தில் நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் எதையும் யோசிக்காமல் உடனே ஒப்புக் கொள்வார்கள். ஆனால் பிரியா அதில் விதிவிலக்கானவர், “என்றார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

மேலும் கதை சொல்ல அவரை சந்தித்த போது, அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாம் என அவருடைய கருத்தை வெளிப்படையாக சொன்னார். உண்மையில், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தின் மீது அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக நானும் அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றியமைத்தேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், படத்தில் நடிக்கவும் சம்மதித்தார்” என்றார் ஸ்ரீகணேஷ்.

மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்க்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கர் ஆசிரியராக நடிக்கிறார். ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ‘குருதி ஆட்டம்’ ஏற்கனவே தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது.

ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் இந்த குருதி ஆட்டம் படத்தை தயாரிக்கின்றனர்.

Back To Top
CLOSE
CLOSE