Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும் “ஏஞ்சல்”!


“ஏபிசிடி”, “நேபாளி” ஆகிய படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “ஏஞ்சல்”. “தொட்டாசிணுங்கி”, “சொர்ணமுகி”, “பிரியசகி”, “தூண்டில்” போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.

அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் “கயல்” ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: கவியரசு, படத்தொகுப்பு: ஜீவன், ஸ்டண்ட் : ரமேஷ் (விஸ்வரூபம் 2) கலை இயக்குநர்: சிவா, நடன இயக்குநர்: தினேஷ்.

“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் “ரொமாண்டிக் ஹாரர்” ஜானரில் இப்படம் உருவாகிறது. மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.

Back To Top
CLOSE
CLOSE