Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

BOSS மூவீஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிப்பில் “ரங்கா”


சிபிராஜ் தனது சிறப்பான கதை தேர்வால் வெற்றிகரமாக தனது எல்லைகளை விரிவாக்கம் செய்து கொண்டே வருகிறார். அடுத்து வெளிவர இருக்கும் அவரின் ‘ரங்கா’ படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்தே ஏதோ புதிதாக ஒரு விஷயம் படத்தில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சமூகப் பிரச்சினையின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படம் சிறப்பாக வந்திருப்பதால் மொத்த குழுவில் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

“வழக்கமாக, தயாரிப்பாளர்கள் படத்தின் வெற்றிக்கு பிறகு நன்றி அறிவிப்பு செய்வார்கள். ஆனால் நான் இது தான் நன்றி சொல்ல சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களின் உழைப்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் முழுப்படத்துக்கும் இருந்தது. குறிப்பாக, காஷ்மீரின் கடும் குளிரில், மிகவும் அசாதாரணமான சூழலில் சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோரின் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தது பாராட்டுக்குரியது. அந்த மாதிரியான சிக்கலான இடங்களில், குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. சிபிராஜ், நிகிலா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோதே, உற்சாகம் தொற்றிக் கொண்டது. படத்தின் இறுதி வடிவத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா.

இயக்குனர் வினோத் டி.எல் பற்றி அவர் கூறும்போது, “அவர் தனது கருத்தை தெரிவித்த விதமும், ரங்கா தலைப்பின் முக்கியத்துவத்தை சொன்னதும் என்னை மிகவும் கவர்ந்தது. ‘காக்கும் கடவுள் ரங்கநாதன்’ என்பதன் தொடர்பு தான் ‘ரங்கா’ என்ற தலைப்பு. சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தது என்னை போன்ற ஒரு தயாரிப்பாளருக்கு கிடைத்த வரம். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

சிபிராஜ், நிகிலா விமல், ஆகியோருடன் சதீஷ், ரேணுகா, லொள்ளு சபா ஸ்வாமி நாதன், ஜீவா ரவி, சுஜாதா பாபு,ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். BOSS மூவீஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்திருக்கிறார். ராம்ஜுவன் (இசை), அர்வி (ஒளிப்பதிவு), அருண் ஷங்கர் துரை (கலை), திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), சத்யா என்.ஜே. (ஆடை வடிவமைப்பு), ட்யூனி ஜான் 24AM (டிசைன்ஸ்), விஜி-தஸ்தா (நடன அமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.

Back To Top
CLOSE
CLOSE