Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் ‘SK 13’ ல் இணைந்த ராதிகா சரத்குமார்


சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தை நேர்மறையான விஷயங்கள் தான் அலங்கரித்து வருகின்றன. ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குனர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக,பாசிட்டாவாக இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபர் படத்துக்குள் வந்திருக்கிறார். ஆம்! SK13 படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.

இது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, “எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும், நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது. கேஈ ஞானவேல்ராஜா போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம். நிச்சயமாக, சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்வோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருப்பார். நயன்தாரா இத்தனை ஆண்டுகள் கழித்தும் உச்சத்தில் இருப்பதை வைத்தே அவரின் ஆற்றலை அறிந்து கொள்ளலாம். இப்போது, ராதிகா மேடம் இந்த படத்தில் சேர்ந்தது, படத்துக்குள் இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. ராதிகா மேடம் அவர்களுக்கு என்றே வடிவைமைத்த கதாபாத்திரம் இது என சொல்லலாம். அவரை தவிர இத்தகைய கதாபாத்திரங்களுக்கு யாரும் உயிர் தந்து விட முடியாது. சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், இத்தகைய பெரிய இயல்பான மனிதர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது எங்களது படத்தை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்க உதவுகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்றார்.ஹிப் ஹாப் ஆதியின் இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.

SK13 படத்தை ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

Back To Top
CLOSE
CLOSE