Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

2 .0 படப்பிடிப்பில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன் -ரஜினிகாந்த்


” 2 .0 படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாக சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என்று தயாரிப்பாளர் சுபாஷ் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம். ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு நல்ல நண்பரை பார்ப்பது கடினம் என்றார்.

முதலில் படப்பிடிப்பு துவங்கும்போது 300 கோடி பட்ஜட்டில் துவங்கியது.கடைசியில் 550 கோடியில் வந்து நின்றது.கண்டிப்பாக அதைவிட இரண்டு மடங்கு லாபத்தை படம் ஈட்டும்.ஆனால் தவிர்க்க முடியாத படமாக 2.0 மாறியது. எப்போது வரனும் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம். லேட் ஆனாலும் கரெக்டா வரனும். வந்தாச்சு வெற்றி உறுதியாகிவிட்டது. ஹிட் ஆக்குவதுதான் பாக்கி… நான் படத்தை சொன்னேன் என தனக்கே உரிய பாணியில் கூறினார். வாழ்த்து கூறிய எனது நண்பர் கமல் ஹாசனுடன் ஷங்கர் செய்யும் ‘இந்தியன் -2’ மாபெரும் வெற்றி பெரும்.

இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியவை ” 2.O திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார் கடுமையாக உழைத்து நடித்தனர் .உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமேக்சில் நடித்தார் ரஜினி. நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்க வாய்ப்பு உள்ளது “என பேசினார்.

Back To Top
CLOSE
CLOSE