Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அமலா பால் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல் தடயவியல் புலனாய்வு திரில்லர் படம்


புதிய பரிமாண சோதனை முயற்சிகளுடன் நிச்சயிக்கப்பட்ட வெற்றிகளை பெற்ற வெற்றியாளர் அமலா பால், பெரும் அளவிலான பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். அவரின் பல அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்த லிஸ்டில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் இந்த நாயகியை மையப்படுத்திய படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கிறார். இந்திய சினிமாவில் ஒரு நாயக கதாபாத்திரம் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல் தடயவியல் புலனாய்வு திரில்லர் படம் இது தான். ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளை சுற்றி நடக்கும் கதை.

மேலும், இந்த படம் கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் டாக்டர் பி. உமாதத்தன் அவர்கள் கையாண்ட ஒரு உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டது. அனூப் பணிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை ஆகிய இருவரும் அவருடன் 6 மாதங்கள் ஆழமாக கலந்துரையாடி கதையை எழுதியிருக்கின்றனர். தடய அறுவை மருத்துவத்தை பற்றி அறிந்து கொள்ள பல மருத்துவ கல்லூரிகளையும் கூட இந்த இருவரும் பார்வையிட்டனர்.

சுவாரஸ்யமாக, ‘ராட்சசன்’ படத்தின் படத்தொகுப்பாளர், கலை இயக்குனர், சண்டைப்பயிற்சியாளர் என ஏறக்குறைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் பணியாற்ற பிரபல நடிகர்கள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது விரைவில் இறுதி செய்யப்படும். ஏ.ஜே. ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2019ல் தொடங்குகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மொத்த படமும் படமாக்கப்பட இருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE