Flash Story
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா
பெண் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கியிருக்கும் ” என் காதலே “முக்கோண காதல் கதை.
தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்
“ARENA” – TEST திரைப்படத்தின் முதல் பாடல் – இப்போது வெளியானது
100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!
BV Frames தயாரிப்பில் பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!
விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !!

சிபிராஜ் உட்பட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளனர்


நடிகர் சிபிராஜ் தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது கேரியரின் பெருமைக்குரிய படமான ‘மாயோன்’ படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள ‘ரங்கா’ படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

படம் மிகச்சிறப்பாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறும்போது, “இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே. குறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்கும் இயக்குனர் கிடைப்பது வரம். படத்தின் இறுதி வடிவம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, அதை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை பார்க்கும்போது ஒரு பார்வையாளராக எனக்கும் ஆர்வம் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் படத்தின் முன்னேற்றத்திற்கு மிகுந்த கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்த இயக்குனர் வினோத்துக்கு தான் எல்லா பாராட்டுக்களும் சாரும்” என்றார்.

படத்தின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் படப்பிடிப்பு முழுவதும் ஆதரவாக இருந்தனர் என ஒப்புக்கொள்கிறார் தயாரிப்பாளர். “திறமையான நடிகர்கள் என்பதை தாண்டி, தயாரிப்பாளர்களின் முதலீடுகளை மனதில் வைத்து நடிக்கும் நடிகர்களுடன் பணியாற்றுவது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. இந்த முறையில், ‘ரங்கா’ படக்குழு என் நலனையும் கருத்தில் கொண்டது. குறிப்பாக, சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் காஷ்மீரின் கடுமையான பனிப்பொழிவு சூழலிலும், படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிவடைய தங்களால் முடிந்ததை செய்தனர்” என்றார்.

சிபிராஜ் உட்பட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளனர். ஜனவரி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இசையை வெளியிடவும், பிப்ரவரியில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

Back To Top
CLOSE
CLOSE