Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்!


நடிகர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படக்குழுவில் இருந்து இசையமைப்பாளர்கள் ஷங்கர் இஷான் லாய் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இது மற்றவர்களுக்கு ஒரு தொழிலில் முறைப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டியுள்ளது. முதலில், இசையமைப்பாளர்கள் மூவரும் ‘சாஹோ’ தயாரிப்பாளர்களுக்கு படம் வெற்றி பெற தங்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தனர். அதன் பிறகு, தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர்களை வாழ்த்தியதோடு, அவர்கள் படத்தில் இருந்து வெளியேறிய செய்தியை அறிவித்தனர்.

தயாரிப்பாளர்கள், UV Creations தங்கள் ட்விட்டரில், “ஷங்கர் இஷான் லாய் உங்கள் ஆதரவுக்கு நன்றி, பணியாற்றுவதற்கு சிறந்த மனிதர்கள். உங்களுடன் விரைவில் பணிபுரிவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
#Saaho ” என்று பதிவிட்டனர்.

தயாரிப்பாளர்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்ற இசையை இந்த படத்தின் மூலம் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அது பற்றிய விவரங்களை கூடிய விரைவில் அறிவிப்பார்கள்.

சாஹோ இந்தியாவில் மிகப்பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாகி, மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்திய அளவில் புகழ்பெற்ற பிரபாஸ் நாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் அவருக்கு ஜோடியாக நடிக்கும் இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

‘சாஹோ’ தயாரிப்பாளர்கள் பிரபாஸ் தோன்றும் போஸ்டர் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதில் பிரபாஸ் மிகவும் சீரியஸான ஒரு தோற்றத்தில் இருந்தார். மேலும் இந்த பிரமாண்ட படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளி ஷர்மா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

UV கிரியேஷன்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த பிரமாண்ட ஆக்‌ஷன் திரில்லர் படத்தை சுஜீ byத் இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 15, 2019ல் உலகமெங்க வெளியாகிறது சாஹோ.

Back To Top
CLOSE
CLOSE