Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜூன்-25ல் மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’


அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

கதாநாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால் படம் அவ்வளவுதான் டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்றெல்லாம் சில செய்திகளை பரப்பி வந்தனர். ஆனால் படப்பிடிப்பை துவங்குவதற்கான பக்காவான முன்கட்ட தயாரிப்புப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்ததை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

அவர்களின் நினைப்பை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக, வரும் ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் இங்கே படமாக்கப்பட உள்ளன.

Back To Top
CLOSE
CLOSE