Flash Story
தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்
“ARENA” – TEST திரைப்படத்தின் முதல் பாடல் – இப்போது வெளியானது
100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!
BV Frames தயாரிப்பில் பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!
விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !!
“Aghathiyaa” Movie Trailer
வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ” மடல் “
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வேம் இந்தியா இணைந்து தயாரித்திருக்கும் ‘அகத்தியா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
கோரிக்கை விடுத்த கமல்ஹாசன் பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்

ZEE5 வழங்கும், டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் “ஐடென்டிட்டி”

டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் மலையாள ப்ளாக்பஸ்டர் “ஐடென்டிட்டி” உங்கள் ZEE5 தளத்தில் !!

TRAILER LINK : https://youtu.be/jYbzlajvQq8

அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கத்தில், டோவினோ தாமஸ், த்ரிஷா கிருஷ்ணன், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி நடிப்பில், ஆக்‌ஷன் கலந்த உளவியல் திரில்லராக உருவாகியுள்ள படம் “ஐடென்டிட்டி”.

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, ஜனவரி 31, 2025 அன்று ZEE5 ஒரிஜினல் சைக்கலாஜிக்கல் த்ரில்லரான ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்தினை, ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக ஸ்ட் ரீம் செய்யவுள்ளது. உளவியல் திரில்லராக ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் இப்படத்தினை, தொலைநோக்கு படைப்பாளிகளான அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கியுள்ளனர். பழிவாங்கலைச் சுற்றி, குற்றத்திற்கான நீதியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, ஜனவரி 31 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. இந்த பிளாக்பஸ்டர் படத்தினை தவற விடாதீர்கள்.

பழிவாங்கும் கதைப்பின்னணியில், நீதியின் அவசியத்தைச் சொல்லும் இப்படம், ஆரம்பம் முதலே நம்மை ஒரு முழுமையான ரோலர்கோஸ்டர் சவாரிக்கு அழைத்துச் செல்கிறது. இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இயக்கியுள்ள, இந்த உளவியல் த்ரில்லர், ஒரு பிளாக்மெயிலரான அமர் பெலிக்ஸின் கொலையின் மோசமான மர்மத்தை அவிழ்க்கிறது -. அந்தக்கொலையை நேரில் பார்த்த, முகங்களை அடையாளம் காண முடியாத நோயால் பாதிக்கப்பட்ட அலிஷாவை, சிஐ ஆலன் ஜேக்கப் விசாரிக்கிறார். அந்த விசாரணை கராத்தே பயிற்றுவிப்பாளரான ஹரன் சங்கரிடம் செல்கிறது. ஆனால் கதை அங்கு முடிவதில்லை. ஹரனும் அலிஷாவும் கொலையின் பின்னணி குறித்த, அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த உண்மைகள் ஒரு பெரிய குற்ற நெட்வொர்க்கை வெளிக்கொண்டு வருகிறது.

இயக்குநர் அகில் பால் கூறுகையில்..,
“ஐடென்டிட்டி படத்தை உருவாக்கியது, ஒரு மறக்க முடியாத பயணமாகும். ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் மனித உணர்ச்சிகளை ஒன்றாகக் கலந்த ஒரு அழுத்தமான கதை. ஒவ்வொரு திருப்பத்திலும் பார்வையாளர்கள் யூகிக்க முடியாத, ஒரு உளவியல் த்ரில்லரை உருவாக்க நாங்கள் விரும்பினோம், திரையில் புதிய அனுபவமாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் உள்ள பரந்துபட்ட பார்வையாளர்களை இப்பட சென்றடையவுள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படத்தின் திருப்பங்களும் ஆழமும் அதைப் பார்க்கும் அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.”

இயக்குநர் அனஸ் கான் கூறுகையில்..,
“ஐடென்டிட்டி திரைப்படம் ஒரு மிகப்பெரிய சவாலாகவும், ஆவலைத் தூண்டுவதாகவும் இருந்தது. இது மனித ஆன்மாவின் இருண்ட மூலைகளுக்குள் ஆழமாக மூழ்கி, பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பில் வைக்கும், ஒரு நல்ல பொழுதுபோக்கு திரில்லர். திறமையான நடிகர்கள் மற்றும் அற்புதமான குழுவினரின் உழைப்பில், இப்படம் மிகச்சிறந்த படைப்பாக உருவானது. இப்படம் ZEE5 மூலம் அனைத்து பார்வையாளர்களையும் சென்றடைவது மகிழ்ச்சி. இப்படத்தை உலகமெங்கும் உள்ள பார்வையாளர்கள் கண்டுகளிப்பதைக் காண ஆவலாக உள்ளேன்.

நடிகர் டோவினா தாமஸ் கூறுகையில்…, “
ஐடென்டிட்டி படத்தில் ஒரு மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்தது, எனது கேரியரில் மிகவும் த்ரில்லான மற்றும் சவாலான அனுபவங்களில் ஒன்றாகும். இந்தத் திரைப்படம் தீவிரமான உணர்ச்சிகள், சிக்கலான உறவுகள் மற்றும் நீதிக்கான இடைவிடாத போராட்டத்தைச் சொல்கிறது. உணர்வுப்பூர்வமான ஒரு அழுத்தமான திரில்லர் கதையில், நானும் ஒரு பங்காக இருந்தது மகிழ்ச்சி. ZEE5 மூலம், பார்வையாளர்கள் “ஐடெண்டிடி” படத்தின், அட்டகாசமான திருப்பங்களுடன் கூடிய, இந்த உளவியல் திரில்லரைக் கண்டு களிப்பதைக் காண ஆவலாக உள்ளேன்.

நடிகை திரிஷா கிருஷ்ணன் பேசுகையில்,
“ஐடென்டிட்டி என்பது வெறும் த்ரில்லர் அல்ல; இது மனித இயல்பினை, இருண்ட மனங்களை ஆராயும் கதையாகும், அதே நேரத்தில் இது பார்வையாளர்களை அதன் எதிர்பாராத திருப்பங்களுடன் கவர்ந்திழுக்கிறது. கதையின் ஆழமும் கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மையும் தான் என்னை இந்த திரைப்படத்தை நோக்கி உண்மையிலேயே ஈர்த்தது. திறமையான நடிகர்களுடன், மிகச்சிறந்த இயக்குநர்களின் கீழ் பணியாற்றியது, ஒரு ஆக்கப்பூர்வமாக நிறைவான பயணமாக இருந்தது. இப்படம் உலகமெங்கும் உள்ள பார்வையாளர்களுக்குச் செல்லவுள்ளது மகிழ்ச்சி.

நடிகர் வினய் ராய் கூறுகையில்,
“இந்த திரைப்படத்தில், அகில் மற்றும் அனஸ் ஆகியோருடன் இந்த அற்புதமான குழுவில் ஒரு பகுதியாக இருந்ததை, அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். தடயவியல் துறையில் இணைந்து பணியாற்றியதால், அவர்களிடையே ஒரு சிறந்த உறவு இருந்தது. என்னை இந்த திரைப்படத்தில் வரவேற்ற பார்வையாளர்களுக்கு நன்றி. இந்தப் பாத்திரம் எனது கேரியரில் நான் நடித்த மிகச் சிறந்த பாத்திரங்களில் ஒன்றாகும். அகில் மற்றும் அனஸ் ஆகியோரால் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கதை, உண்மையிலேயே தனித்துவமானது. இது மூன்று அழுத்தமான கதாபாத்திரங்களைச் சுற்றி வருகிறது. இது துரோகம், சஸ்பென்ஸ் மற்றும் சிலிர்ப்பூட்டும் திருப்பங்களால் நிரம்பியுள்ளது. ஒரு திரைப்படத்தில் நீங்கள் விரும்பும் அனைத்தும், இப்படத்தில் இருக்கிறது. “ஐடெண்டிடி” 2025 ஆம் ஆண்டில், இந்திய சினிமாவிற்கு ஒரு அற்புதமான தொடக்கமாக இருக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.

ஜனவரி 31 ஆம் தேதி, ZEE5 ஒரிஜினலான ஐடென்டிட்டி படத்தினை, மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்

Back To Top
CLOSE
CLOSE