மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவரது பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்கள் வரும் 27 தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா கூறும்போது, ”திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்து காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை […]