Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இசைஞானி இளையராஜா நடத்தும் என்னுள்ளே எம்.எஸ்.வி.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவரது பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்கள் வரும் 27 தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா கூறும்போது,
”திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்து காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம்மை உயிரை எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வை கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்.” என்றார் இளையராஜா.
என்னுள்ளே எம்.எஸ்.வி. என்ற இந்த இசைநிகழ்ச்சி ஜீவா – இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது.

Back To Top
CLOSE
CLOSE