Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

ராசியான நடிகை எனப் பெயர் பெற்ற நாயகி “சுரபி”

இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களின் வெற்றியை தொடர்ந்து ராசியான நடிகை எனப் பெயர் பெற்றார் நாயகி சுரபி. ஜெய் நடிப்பில் உருவாகிவரும் பெரிதும் எதிர்பார்க்க படும் ‘புகழ்’ படத்தில் ஜெய்க்கு இணையாக நடித்து வருகிறார் சுரபி.பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த் தயாரிப்பில் இயக்குனர் மணிமாறன் இயக்கும் ‘புகழ்’ படத்தைப் பற்றி சுரபி pugazh (1)கூறும்பொழுது “இப்படத்தில் எனது கேரக்டரின் பெயர் புவனா. நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று மனதில் உள்ளதை உள்ளபடி எதையும் மறைக்காமல் கூறும் straight forward கதாப்பாத்திரம் அமைந்திருந்தது. அதனாலோ என்னவோ இந்தக் கதா பாத்திரம் என் மனதுக்கு பிடித்து போன பாத்திரம் ஆனது. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிப்பது செம்ம த்ரில்.எந்தக் காரியத்தில் ஈடுப்பட்டாலும் அதில் வெற்றிப் பெற முழு முயற்சி எடுக்க வேண்டும் என தீவிரமாக நம்புபவர். கார் ரேசிங்கில் பெருத்த ஈடுபாடுக் கொண்ட ஜெய் ‘தல’ அஜித் போன்று பல போட்டிகள் வென்று புகழ்பெற வாழ்த்துகிறேன்.
“ இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் நடித்ததும், ஒளிபதிவாளர் வேல்ராஜ் சாருடன் மீண்டும் இணைவதும் . மணிமாறன் சுவராசியமான காட்சிகளை பதட்டமில்லாமல் படமாக்க கூடியவர். இவரது இயக்கத்தில் வேலையை செய்ததுதான் எனக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மாவின்’ ‘அட்டாக்’ படத்தில் நடிப்பதற்கு ஒரு பயிற்சியாக இருந்தது
“ ‘அட்டாக்’ படத்தில் நான் ஒரு பைக் மெக்கானிக் ரோலில் நடிக்கிறேன். நிஜ வாழ்வில் இப்படி ஒருவரை நான் சந்தித்து இல்லை, ஆகவே இந்த role எனக்கு சவாலாகவே இருந்தது.

“ விவேக் மெர்வின் இசையில் அனைத்து பாடல்களும் முணுமுணுக்க வைக்கிறது. ‘புகழ்’ படத்தின் டிரைலர் 23ஆம் தேதி வெளிவருகிறது. ஒரு சாதாரண ரசிகை போல் டிரைலரை பார்க்க பெரும் ஆவலாக உள்ளேன்.” எனக் கூறினார் இளம் நாயகி சுரபி.

Back To Top
CLOSE
CLOSE