நடிகர் சிபிராஜ் தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது கேரியரின் பெருமைக்குரிய படமான ‘மாயோன்’ படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள ‘ரங்கா’ படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார். படம் மிகச்சிறப்பாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறும்போது, “இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே. குறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் […]