புதிய புதிய இலக்குகளை மிக மிக ஆர்வத்தோடு கடக்கும் ஒரு மாலுமி தான் நடிகர் விஜய் ஆண்டனி என்றால் மிகை ஆகாது. ஒரு இசையமைப்பாளராக துவங்கிய விஜய் ஆண்டனி மிகப்பெரிய அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் பெற்றார். பல்வேறு அவதாரங்களை எடுத்த விஜய ஆண்டனி, தன் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி நடிகராக, எடிட்டராகவும் மாறியிருக்கிறார். எஸ் எஸ் ராஜமௌலியின் முன்னாள் உதவியாளர் கணேஷா இயக்கும் திமிர் பிடிச்சவன் படத்தில் தன் ஒட்டு மொத்த திறமைகளையும் உபயோகப்படுத்த இருக்கிறார் விஜய் ஆண்டனி. […]