Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

சிலம்பத்தால் வசீகரிக்கப்பட்டு ஈர்க்கப்பட்ட விஜய் ஆண்டனி

புதிய புதிய இலக்குகளை மிக மிக ஆர்வத்தோடு கடக்கும் ஒரு மாலுமி தான் நடிகர் விஜய் ஆண்டனி என்றால் மிகை ஆகாது. ஒரு இசையமைப்பாளராக துவங்கிய விஜய் ஆண்டனி மிகப்பெரிய அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் பெற்றார். பல்வேறு அவதாரங்களை எடுத்த விஜய ஆண்டனி, தன் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி நடிகராக, எடிட்டராகவும் மாறியிருக்கிறார். எஸ் எஸ் ராஜமௌலியின் முன்னாள் உதவியாளர் கணேஷா இயக்கும் திமிர் பிடிச்சவன் படத்தில் தன் ஒட்டு மொத்த திறமைகளையும் உபயோகப்படுத்த இருக்கிறார் விஜய் ஆண்டனி. போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய் ஆண்டனி இன்னொரு புதிய அவதாரத்தையும் எடுக்கிறார் விஜய் ஆண்டனி.

பன்முகத் தன்மைகளை கொண்ட விஜய் ஆண்டனி, இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக சிலம்பம் பயின்று வருகிறார்.

விஜய் ஆண்டனியின் இந்த முயற்சிகளை பற்றி இயக்குனர் கணேஷா கூறும்போது, “எல்லா துறைகளிலும் தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுக்க முயற்சிக்கும் விஜய் ஆண்டனியின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய அர்ப்பணிப்பும், பர்ஃபெக்‌ஷனும் பாராட்டுக்குரியது. ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதையும் தெளிவாகவும், சரியாகவும் செய்யக்கூடியவர். இந்த சிறந்த பண்பு தான் அவரின் கேரியரில் இந்த உயரத்திற்கு உயர்த்தியிருக்கிறது.

மேலும் இந்த படம் வழக்கமான போலீஸ் வெர்சஸ் வில்லன் கதையாக இல்லாமல், மைண்ட் கேம் கூறுகளை உள்ளடக்கி, அதிலும் பயணிக்கும் படம். சமகால இளைஞர்களின் நோக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் படமாக இருக்கும்” என்றார்.

Back To Top
CLOSE
CLOSE