நடிகர்கள் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் கரூர் சென்றனர். அங்கு நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள். அவர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:– நாங்கள் உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒருவேளை வெற்றி வாய்ப்பினை இழந்தாலும் உங்களுடன் எப்போதும் துணை நிற்போம். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாங்கள் கேள்வி கேட்க கூடாது என்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடிகர்கள் இணைந்து புதிய கட்டிடம் கட்டினால் […]