போலீஸ் வேடத்தில் தன்ஷிகா நடிக்கும் “ காத்தாடி “ கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்கும் படம் “ காத்தாடி “ இந்த படத்தில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகனும், பிரபல நடிகை மகேஸ்வரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. தாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா […]